Bhoo thatha's Blogspot

Search my older Blog

Tuesday, November 24, 2009

nobel laurette--sir c.v .raman

- நீலநிறம்...வானுக்கும், கடலுக்கும், நீல நிறம்....!
ஸி.வி. ( சந்திர சேகர வேங்கட ) ராமனின் பூர்வீகம் தஞ்சை ஜில்லா மாங்குடி கிராமம். இவரது தகப்பனார் ஸ்ரீசந்திரசேகர ஐயர் பி.ஏ. பட்டம் பெற்றவர். மகா தைரியசாலி. திருச்சிராப்பள்ளியில் ஒரு பள்ளிக் கூடத்தில் உபாத்தியாராக இருந்தார். அந்த ஊரில் தான் ராமன் 1888-ம் வருஷம், நவம்பர் மாதம் 7ம் தேதி பிறந்தான்.


பள்ளிக் கூடத்தில் ராமனை ஒரு மேதாவி என்று உபாத்தியார்கள் மதித்தனர். 12-வது வயதில் பையன் ""மெட்ரிக்'' தேறி விட்டான். பிறகு வால்டயர் கல்லூரியில் எஃப்.ஏ. படிக்கையில், புராணக் கட்டுரைப்போட்டியில் ராமாயணம்,மகாபாரதம் ஆகியவை பற்றி எழுதி முதல் பரிசு பெற்றான்.


எஃப்.ஏ. தேறிய பிறகு சென்னை பிரஸிடென்ஸி காலேஜில் பி.ஏ.படிப்பு. தனக்குப் பிரியமான பௌதீகத்தையே எடுத்துக்கொண்டு முதல் வகுப்பில் தேறி, "" ஆரணி தங்க மெடல்'' பெற்றார் ராமன்.


அடுத்தபடி என்ன ? எஃப்.ஸி. எஸ். பரீட்சைக்கு உட்கார்ந்து, மத்திய சர்க்கார் நிதி இலாகாவில் பெரிய உத்யோகம் பெறுமாறு பலர் வற்புறுத்தினர். அப்படியே அந்தப் பரீட்சை எழுதி,முதல்வராகத் தேறினார் ராமன். அப்போது அவருக்கு வயது 18.


சென்னை கடற்சுங்க அதிகாரியாக இருந்த ஸ்ரீ எஸ்.கிருஷ்ணசாமி அய்யர் தமது புதல்வி சௌ.திரிலோக சுந்தரியை ராமனுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுத்தார். கிரகப்பிரவேசம் ஆனதும், ராமன் உத்யோகப் பிரவேசம் செய்தார். கல்கத்தாவில் இந்திய நிதி இலாகாவில் உதவி அக்கவுண்டன்ட் ஜெனரல் வேலை.  பின்னர், ஆக்ஸ்போர்டு சர்வகலாசாலையின் அழைப்பின் பேரில் இங்கிலாந்துக்குச் சென்ற ராமன், பிறகு கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் சென்றார். கப்பல் பிரயாணத்தின் போது , ""கடல் நீலநிறமாக இருப்பதன் காரணம் என்ன ?'' என்ற கேள்வி அவர் மனதில் பிறந்தது. தாய்நாடு திரும்பியதும் அதற்கான விடையையும் கண்டுபிடித்தார். அதுவே ""ராமன் சித்தாந்தம்'' என்று பிரபலமாயிற்று. 1930-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து ஒரு படி உயர்ந்தது !!!!
நன்றி---பொக்கிஷம்---ஆனந்த விகடன் 

No comments: