Bhoo thatha's Blogspot

Search my older Blog

Tuesday, November 17, 2009

herbal -betel

இன்றைய மூலிகை           வெற்றிலை*

வெற்றிலை . மலேசியாவில் தோன்றியதாக கூறப்படுகிறது . இச்செடி-கொடி  இந்தியா,
இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.
 வளர்ப்பு கொடிதான் . --தானாக எங்கும் விளைவதில்லை
வெற்றிலைவளரும் இடத்தை  கொடிகால் என்று கூறுவார்கள் .தமிழ் நாட்டில் அது
அகத்தி செடிகளின் மேல் பெரும்பாலும் படர விட்டு வளர்க்கப்படுகிறது .இது
செடியை சுற்றி படர்வதால் நாகவல்லி என்றும் பெயர் பெற்றுள்ளது .
நாகவல்லி சிலை ஒரிசாவின் அனைத்து ஆலயங்களிலும் இடம் பெற்றுள்ளது .முக்கியமாக
கோர்நாகில் அதிகம் உள்ளது

வெற்றிலை வெறும் இல்லை மட்டுமல்ல மூலிகை மட்டுமல்ல .
அது மிகுந்த சமூக மதிப்பு வாய்ந்தது .
 தமிழர் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது
அந்தக்காலத்தில் மன்னர்கள் தொடர்ந்து வெற்றிலையை தாம்பூலம் ஆக
பயன்படுத்தினர் அந்த வெற்றில்லையை மடித்துக்கொடுப்பதற்க்காக
அமைச்சர் மதிப்பில் ஒரு அதிகாரி அருகில் இருப்பார் .அவருக்கு சில சமயம்
அமைச்சைரை விட மதிப்பு அதிகம் உண்டு .
அவருக்கு பெயரே அடைப்பக்காரர் .
அரியநாயகம் என புகழ்ப்பெற்ற மதுரை நாயக்கர் முதலில் கிருஷ்ணா தேவராயரிடம்
அடைப்பக்காரராக இருந்ததாக கூறப்படுகிறது .
எந்த ஒரு செயலுக்கும் அச்சாரம் போடுவதற்கு வெற்றிலை பாக்கு   கொடுத்து
விட்டால் போதும் அதுவே ஒப்பந்தம் ஆன மாதிரி ..
இன்னும் கூட திருமண நிச்சயத்தை வெற்றிலை பாக்கு மாற்றிக்கொள்வது என்றுதானே
கூறுகிறோம் .
நமது சமூக வாழ்வில் அத்தனை மதிப்பு வெற்றில்லைக்கு உண்டு .
தமிழர்களிடையே எந்த முக்கியமான வைபவமாக இருந்தாலும் வெற்றிலைக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
வெற்றிலை இல்லாமல் எந்த சுப காரியமும் தமிழர் வாழ்வில் இல்லை
வழிப்படும் இல்லை .வெற்றிலை இல்லாத கடவுள் வழிபாடு தமிழர் வாழ்வில் இல்லை .ஏன்
என்றே தெரியாமல் தொடர்ந்து வழக்கமாக நாம் வெற்றிலையை நமது வாழ்வின் அத்தனை
செயல்களிலும் உபயோகித்துவருகிறோம்
கடவுள்ளை மறுத்தவர்கள் கூட இதை ஏன் என்று கேட்கவில்லை .

வெற்றிலை என்பது பன்மை
வெற்றிலைகள் என்று கூறப்படுவதில்லை .
அதை என்றும் ஒன்றாகவும் உபயோகிப்பதில்லை .
.
வெற்றிலைப் பயிருக்கு பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை
வெட்டிப் பதியம் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். .
 வெற்றிலையில்  கரும்பச்சை நிறத்திலிருப்பது ஆண் வெற்றிலை என்றும் இளம்பச்சை
நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள்.
சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப்பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு .
வெற்றிலையை கொண்டு ஆருடம் ஜோஷ்யம் கூட பார்ப்பதுண்டு .மாந்திரீகத்திலும்
இதற்க்கு தனி இடம் உண்டு .

மூலிகையின் பெயர் -: வெற்றிலை.

தாவரப் பெயர் -: PIPER BETEL.

 தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.

தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், என்று வேறு பெயர்களும் உண்டு

வெற்றிலை  , வெப்பம் தரும், ,
உமிழ்நீர் பெருக்கும்,
பசி உண்டாக்கும்,
பால் சுரக்க வைக்கும்,
காமத்தைத் தூண்டும்.
நாடி நரம்பை உரமாக்கும்,
நறுமணம் அளிக்கும்

வெற்றிலைச்சாற்றுடம் பாலையும் கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.
குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி,
கோரோசனை, ஏதேனும் ஒன்றை சேர்த்து கொடுக்க சளி, இருமல், மாந்தம், இழுப்பும்
குணமாகும்.
பல மருந்துகளுக்கு அனுபானம் வெற்றிலையாகும் .

ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்க சிறிது
வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 40 நாட்கள் சாப்பிட்டு
வருகிறார்கள்.இது ஒரு சிறந்த கருத்தடை மருத்து
வெற்றிலை வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை
அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

கும்பகோணம் வெற்றிலையும் இசையும் பெயர் பெற்றது .
நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு
கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.

The chief constituent of the leaves is a volatile oil varying in the leaves
from different countries and known as Betel oil. It contains two phenols,
betel-phenol (chavibetol) and chavicol. Cadinene has also been found. The
best oil is a clear yellow colour obtained from the fresh leaves.
Medicinal Action and Uses---The leaves are stimulant antiseptic and
sialogogue; the oil is an active local stimulant used in the treatment of
respiratory catarrhs as a local application or gargle, also as an inhalant
in diphtheria. In India the leaves are used as a counter-irritant to
suppress the secretion of milk in mammary abscesses. The juice of 4 leaves
is equivalent in power to one drop of the oil.

அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம்
அதி பித்தம் இரண்டாவதூறு நீரே
கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுர நான்காவதூறு மந்நீர்
மடையெனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி
வருநீர் களைச் சுகித்து
தடையுருப் பித்தமொடு மந்த நோயும்
தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம்.”

---தேரையர்.
இதே கருத்தை வள்ளல் பெருமானும் தனது வசனப்பகுதியில் கூறி இருக்கிறார் .

இரண்டு வெற்றிலை கூட அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று
விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே
முறியும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும்
அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர்
விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு கால் லிட்டர் ஆக குறையும் வரை
கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து  மூன்று வேளை உணவுக்கு முன்பு
சாப்பிட்டால் குணமாவதாககூறப்படுகிறது

Paan   Urdu/Hindi/Bengali,
Taambuul and Nagavalli in Sanskrit.
:Vetrilai Tamil,
Tamalapaku Telugu,
Vidyache pan Marathi,
veeleyada yele Kannada,
Vettila Malayalam,

வெற்றிலையை அளவுடன் உணவுக்கு பின் உபயோகிக்க உண்ட உணவு ஜீரணமாகும் .ஜப்பானிய டீ
விருந்து  முறைப்போல் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு
இவைகளை சேர்த்து  அந்தக்காலத்து மனிதர்கள் போடும் விதமே ஒரு கலையாகும்  அலாதி .
மிகவும் ரசித்து செய்வர்
பின் புறம் இருக்கும் நரம்பை நீக்கிவிடவேண்டும் .
வெற்றிலை பாக்குடன்  சேரும்போது சுண்ணாம்பு உண்ணத்தக்கதாக மாறிவிடுகிறது
உடலுக்கு சுண்ணாம்பு சத்து கிடைத்து விடுகிறது .
அந்தக்காலத்து பாட்டிகளுக்கு நாளுக்கு இரண்டு முறை பிரஷ் செய்யும்
இந்தக்காலத்து நாகரீக மனிதரை விட பற்கள் வலுவாக இருந்தது .
இன்னும் வெற்றிலையின் மகிமை சொல்ல சொல்ல விரியும்
வெற்றிலை போடுவத்தல்ல .தரிப்பது என்பர் .
அதுவே அதன் மதிப்பை காட்டும் .

நன்றி மின்தமிழ் --
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

No comments: