பொதுவா வைட்டமின் ஏ, கே, இ சத்துக்களெல்லாம் தண்ணியில கரையாது. அது எண்ணெய் சத்துலதான் (கொழுப்புச் சத்து) கரையும். அதுக்குத் தேவையான 25 சதவிகித சக்தி, கொழுப்பு மூலமா நமக்கு தேவைப்படுது. ஆனா, நம்ம நாட்டுல 10 சதவிகித சக்திதான் கொழுப்பு மூலமா கிடைக்குது!'' என்று ஆதாரபூர்வமாக விளக்கிய சம்பந்தமூர்த்தி,

''ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு குணமிருக்கு. நிறைவடையாத கொழுப்பு அமிலங்கள் (Unsaturated Fatty Acids) அதிகமாவும், நிறைவடைந்த கொழுப்பு அமிலங்கள் (Saturated Fatty Acids)குறைவாவும் இருக்குற எண்ணெய்தான் உணவு தயாரிப்புக்கு ஏற்றது (பார்க்க பட்டியல்).

ஒவ்வொரு எண்ணெயிலயும் முக்கியமான பல சத்துக்கள் இருக்கு. அதனால ஒரே வகை எண்ணெயை பயன்படுத்தாம, எல்லா வகை எண்ணெய்களையும் மாத்தி மாத்தி பயன்படுத்தலாம். ஆனா, பல எண்ணெய்களை ஒண்ணா கலந்துடக் கூடாது'' என்றவர்,
''நிறைவடையா கொழுப்பு அமிலங்கள் அதிகமிருக்கிற எண்ணெய் உடம்புக்கு நல்லது. அதிலும் ஒருமுனை நிறைவடையா கொழுப்பு அமிலங்கள் (MUFA - Mono Unsaturated Fatty Acids)இருக்குற எண்ணெய்கள் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கின்றன. அதேநேரத்துல பல முனை நிறைவடையா கொழுப்புகள் (PUFA- Poly Unsaturated Fatty Acids) அதிகமிருக்குற எண்ணெய்கள் நல்ல கொலஸ்ட்ராலையும் சேர்த்து மொத்தமா உடம்புல இருக்குற எல்லா கொலஸ்ட்ராலையும் குறைக்கற தன்மை கொண்டவை. பனை எண்ணெயில நிறைவடைந்த கொழுப்புகள் அதிகமா இருந்தாலும் வைட்டமின் ஏ சத்து அதிகமா இருக்கு. அதையும் அளவா உபயோகிச்சா நல்லதுதான்.

பொதுவா எந்த எண்ணெயையுமே திரும்பத் திரும்ப சூடு படுத்தக்கூடாது. அடுப்பில் சூடு படுத்தும்போது புகைய ஆரம்பிக்கிற நிலைவரை எண்ணெயைச் சூடுபடுத்துறது தப்பில்லை. அதுக்கு மேல சூடுபடுத்தும் போது அதுல இருக்குற கொழுப்புகள் சிதைந்து, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். ஒருமுறை சமையலுக்கு உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துறதும் நல்லதில்லை. அப்படிப் பண்ணும்போது குடலுக்கு ஆகாத 'அக்ரோலின்'ங்கிற வேதிப்பொருள் உண்டாகி உடலுக்கு தீமை செய்யும்
நன்றி;அவள் விகடன்
No comments:
Post a Comment