Bhoo thatha's Blogspot

Search my older Blog

Friday, November 13, 2009

kathambam

மனோவசிய வல்லுநர்களில் சிலர் தங்களிடம் வருபவர்கள் விரும்பினால் அவர்களது பூர்வ ஜென்ம நினைவுகளை வரவழைப்பதாகக் கூறுவதைக் கேள்விப் பட்டிருக்கிறோம்.
 
ஆனால் விரைவில் 'ராஸ் பீச்லே
ஜனம் கா' என்ற டி.வி. நிகழ்ச்சிவர இருக்கிறதாம்.இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்களை கேமிரா முன் வசியப்படுத்தி அவர்களது முந்தைய பிறப்புகளை வெளிப்படுத்தப் போகிறதாம்.
 
இதற்கு ஒப்புக்கொண்டுள்ள ஒரு பிரபலம் சுஷ்மிதா சென் ஆவார்.

2)வாழ்க்கை முறை நோய்கள் ஊழியர்களை பாதிப்பதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான சில உடல் நலத் திட்டங்களை பின் பற்றுகிறதாம்.
ஊழியர்கள் தொப்பையைக் குறைத்தால் பெப்சிகோ வெகுமதி அளிக்கிறது.
மாருதி சுசுகி,எல்.ஜி., ஆகிய நிறுவனங்கள் காலை நேர உடற்பயிற்சியை ஊக்குவிக்கிறதாம்.
 
பார்தி ஏர்டெல் தொடர் ஓட்டங்களையும் TCS தியானத்தையும் ஊக்குவிக்கிறது.

3)யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது.முழுதும் தசையால் ஆனது.துதிக்கை அதிகப்பட்சம் எட்டு அடி நீளம் இருக்கும்.
 
ஒரே நேரத்தில் துதிக்கையின் மூலம் இரண்டு காலன் தண்ணீரை உறிஞ்சும் ஆற்றல் உடையது.நாள் ஒன்றுக்கு நாற்பது கேலன் தண்ணீரைக் குடிக்கும்.
 
 
யானையின் ஆயுள் நூறு ஆண்டுகள்.

4)ஒரு நாள் போட்டிகளில் 17000 ஓட்டங்களும்..டெஸ்ட் போட்டிகளில் 12773 ஓட்டங்களும் எடுத்து சாதனை புரிந்திருக்கும் சச்சின் 1989ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம்நாள் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார்.இத்தொடரின் நாலாவது டெஸ்டில் வக்கார் யூனிஸ் வீசிய பந்து சச்சினின் முகத்தாடையை தாக்கியது.மூன்று..நான்கு பற்கள் உடைந்துவிட்டதாம்.ரத்தத்தை நிறுத்த ஐஸ் கட்டியை வைத்து விட்டு..பிட்ச்சில் விழுந்த பற்களை பேட்டால் ஒதுக்கித் தள்ளிவிட்டு..ரத்தம் படிந்த பகுதியை மண்ணால் மூடிவிட்டு வலியை பொறுத்துக் கொண்டு 57 ஓட்டங்களை எடுத்தாராம்.

5) ஒரு சமயம் காந்தி காலை நேரத்தில் வேகமாக நடந்துக் கொண்டிருந்தார்.வழியில் அவரைப் பார்த்த ஒரு நண்பர் 'இத்தனை வேகமாக எங்கே போகிறீர்கள் ' என்றார்.அதற்கு அண்ணல் 'சற்று தூரத்தில் தெரியும் என் வாலிபத்தைச் சந்திக்கத்தான் விரைவாக ந்டந்து சென்றுக் கொண்டிருக்கிறேன்' என்றார்.

6)ஒரு ஜோக்

நீதிபதி- மிக சாமர்த்தியமாக கோடிக்கணக்கான ஊழலை எப்படி செஞ்சீங்க?
அமைச்சர்(குற்றவாளி)-ரொம்ப புகழாதீங்க..கூச்சமா இருக்கு..என்னையே இப்படி புகழற நீங்க என் தலைவனை எப்படி புகழ்வீங்க..!
 
!''தமிழா தமிழா  ''பதிவிலிரிந் து

No comments: