Bhoo thatha's Blogspot

Search my older Blog

Saturday, November 14, 2009

hanuman


1. அனுமார் அனுக்கிரஹிப்பார்
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்

.....ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, வினயத்தில் உச்சநிலை - இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் என்று உண்டு என்றால் அது ஆஞ்ஜனேய ஸ்வாமிதான். .....பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம்.(ஐடியல்) .....ஆஞ்ஜனேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசித்து விடும். பரம வினயத்தோடு பகவத் கைங்கர்யம் செய்து கொண்டு எல்லாருக்கும் நல்லது செய்வோம்.

2. மாருதி மஹிமை
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்


.....ஆஞ்ஜநேய ஸ்வாமியின் ஆச்சர்யமான பெருமை இதில்தான் இருக்கிறது. சாஞ்சல்யத்துக்கே (சஞ்சலத் தன்னைக்கே) பேர்போன கபியாக அவர் இருந்தபோதிலும், அதோடு மஹாபலிஷ்டராக இருந்த போதிலும், மனஸைக் கொஞ்சங்கூடச் சஞ்சலம், சபலம் என்பதேயில்லாமல் அடக்கி, புலன்களையெல்லாம் அடக்கி, இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி, சரீரத்தையும் ராமசந்த்ரமூர்த்தியின் தொண்டுக்கே என்று அடக்கி அடிபணிந்து அவர் இருந்ததுதான் அவருடைய மஹிமை ......புலன்களை வென்றவர் இவர்: 'ஜிதேந்த்ரியர்'- ஜித இந்த்ரியர்: ஜயிக்கப்பட்ட இந்த்ரியத்தை உடையவர். மனஸ்தான் அத்தனை இந்த்ரிய கார்யத்துக்கும் மூலம். ஆகையால் அதை ஜயிப்பவர்தான் ஜிதேந்த்ரியர். மஹா சஞ்சலம் வாய்ந்த மனஸை ஜயித்த வாய்ந்த மனஸை ஜயித்த ஜிதேந்த்ரியர் இவர். .....அதனாலேதான் புத்திமான்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள 'புத்திமதாம் வரிஷ்ட'ராகி யிருக்கிறார். மனஸை நல்லதிலேயே 'ஸ்டெடி'யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி. ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்ஜநேய ஸ்வாமி 'புத்திமதாம் வரிஷ்ட'ராயிருக்கிறார்.

3. அஞ்ஜனைச் செல்வன் 'அஜாட்யம்' அருளட்டும்
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்


..... 'அரோகதா' என்றால் ஆரோக்யம். அதுவும் ஆஞ்ஜநேய ஸ்வாமியை ஸ்மரிப்பனுக்கு உண்டாகிறது. அப்புறம், ஆஞ்ஜநேய ஸ்வாமியை ஸ்மரிப்பவனுக்கு உண்டாகிறது. அப்புறம், 'அஜாட்யம்' என்று ஒன்று போட்டிருக்கிறது. அதற்கு 'ஜடமாக இல்லாத தன்மை' என்று அர்த்தம். ..... ஆனால் எட்டாவதாக இன்னொன்று, 'அஜாட்யம்' என்று சொல்லியிருக்கிறதே... ச்லோகத்தின் வரிசையில் இது எட்டாவது இல்லை; ஏழாவதாக வருகிறது. ..... 'அஜாட்யம்' - ஜடமாயில்லாமலிருப்பது என்றால் என்ன அர்த்தம்?

4. ராமகுருவின் சிஷ்ய ஹநுமார்
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்


துளஸீதாஸ் ஏதோ கல்பனையில் எழுதினாரென்றில்லாமல் ப்ரத்யக்ஷத்திலேயே ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹத்துக்குப் பாத்திரமானவர். அவருடைய ஜீவ்ய சரித்ரத்தைப் பார்த்தால் அதில் ஆஞ்ஜநேயரோடு அவர் நேர்முகமாகவே எவ்வளவு நெருக்கமாகப் பழகியிருக்கிறாரென்று தெரியும். அவரையே ஆஞ்ஜநேய அம்சமாகச் சொல்வதுண்டு. ஆஞ்ஜநேயர் மாதரியே அவரும் மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்தான்.....ஆகையினால் ஒருவர் ஞானம் பெற்றாரென்றால் அடுத்த கேள்வியாக வருவது, அவர் யாரிடம் ச்ரவணம் செய்தார். அதாவது அவருக்கு ஞானோபதேசம் செய்த குரு யார் என்பதுதான்.......ஞானி ஆஞ்ஜநேயருக்கு உபதேசம் செய்த ஞானாசார்யார் யார்?....ஆஞ்ஜநேயர் எப்போது ஞானோபதேசம் பெற்றாரென்றால், ராமாயணக் கதை முக்காலே மூணு வீசம் முடிந்து, ராம பட்டாபிஷேகமும் ஆன அப்புறந்தான். அதாவது அவர் ஸூர்யனிடம் உபதேசம் பெற்றுக் கொண்ட பாலப் பிராயத்திலிருந்து எத்தனையோ வருஷம் பின் தள்ளித்தான்.

5. ஆஞ்சநேயர் அருள்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

..... ஆக, உடல் வலிமையும், புத்தி வலிமையும் ஒரு மனிதனிடம் ஒருசேர சேர்ந்திருந்தால், ஒரு காரியத்தைச் சாதிப்பதற்கு, புத்தி வலிமையை வைத்துக்கொண்டு 'பிளான்கள்' போட முடியும். .... அனுமாரைப் பிரார்த்தனை செய்தால், பூஜை செய்தால், நல்ல புத்தி, நல்ல சக்தி இதெல்லாம் கிடைக்கும். அவரை நினைத்த மாத்திரத்திலே இதெல்லாம் வரும். .... ஆனால் ஹனுமானுடைய சேவையில் எந்தப் பின்னணியுமே கிடையாது. 'விஸ்வார்த்த சேவா, ஸ்வயம் சேவா' என்பார்கள். பிரதிபலனை எதுவும் எதிர்பார்க்காமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பணி புரிந்தவர் ஹனுமான். அவருடைய உள்ளத்திலே இருந்தது ஒன்றே ஒன்றுதான். ....

6. ஸமய ஸஞ்ஜீவி
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜேயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்


...... சிவனுக்கு எப்போதும் அபிஷேகத்தில் ப்ரியம் அதிகம். அது போல் மஹாவிஷ்ணு அலங்கார ப்ரியர். சூரிய பகவானுக்கோ நமஸ்காரம் செய்தால் போதும். பூரண திருப்தியை அடைவார். இதேபோல் ஹநுமத் ஸ்மரணாத் பவேத். ஸ்மரித்தால், நினைத்தால் போதும்; அநுமனின் அருளைப் பெற்று எல்லாச் செல்வங்களையும் பெறலாம். ..... விபீஷணரின் சந்தேகத்தைப் போக்கும் வகையில் ஜாம்பவான் கூறுகிறார். ..... அநுமார் உயிர் பெற்றிருந்தால் போதும், மற்றவர் மடிந்துவிட்டாலும் உயிர் பெற்று எழந்து விடலாம். அநுமார் உயிரை இழந்துவிட்டாலோ மற்றவர் உயிருடன் இருந்தாலும் மடிந்து போனது போல்தான்.......

7. ஆற்றல் அருளும் ஆஞ்சனேயர்
திரு டி.எஸ்.இராகவன்


அனைத்து அலுவல்களையும் ஆனைமுகனின் ஆதரவில் தொடங்குகிறோம். முயற்சிகள் முழுமையாக முடியும்போது மும்மூர்த்திகளின் முழுமையாம் மாருதியின் திருவடி பணிகிறோம். முடியாத பணிகளையும் முடித்து வைப்பவன் ஜெய மாருதி. அசாத்தியத்தைச் சாதிப்பவன். இராமதூதன்.......

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க .

No comments: