Bhoo thatha's Blogspot

Search my older Blog

Monday, November 16, 2009

computer news -windows operating system-7

WINDOWS -7 புது மைகள்
இதனைப் பயன்படுத்த கம்ப்யூட்டரின் திறன் சற்று கூடுதலாக வேண்டும் என்றாலும், புதியதாக வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் கம்ப்யூட்டர்கள் இந்த தேவையை நிறைவேற்றுபவையாகவே உள்ளன.

எனவே புதியதாகக் கம்ப்யூட்டர்கள் வாங்கிப் பயன்படுத்துவோர் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே தங்கள் பணிகளைத் தொடங்குகின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் சில புதிய வசதிகளை  இங்கு காணலாம்.


விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஸ்லீப் மற்றும் ரெஸ்யூம் (தற்காலிகமாக நிறுத்திப் பின் மீண்டும் இயக்கும் வசதி) செயல்பாடு மிக நேர்த்தியாகவும் எந்த பிரச்னையுமின்றியும் செயல்படுகிறது. இதனால் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடிக்கடி நிறுத்தி இயக்க வேண்டிய தேவை இல்லை.


விண்டோஸ் லோகோ கீயுடன் வலது மற்றும் இடது ஆரோ கீகளை இயக்குகையில் அப்போதைய விண்டோ அந்த திசைகளில் ஒதுங்கி இடம் பிடித்து மற்ற விண்டோக்களுக்கு இடம் தருகிறது. இதனால் இரண்டு செயல்பாடுகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடிகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு விண்டோவில் இன்டர்நெட் பிரவுஸ் செய்து கொண்டே, இன்னொன்றில் இமெயில் தொடர்புகளைக் காணலாம். ஒரே டாகுமெண்ட்டில் இரு வேறு இடங்களில் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம்.


திரைக் காட்சியை அப்படியே படம் பிடித்து பைலாக மாற்ற பல வழிகள் உள்ளன. விண்டோஸ் 7 ஸ்நிப்பிங் டூல் (Snipping Tool) என்ற ஒரு வசதியைத் தருகிறது. ஸ்நாப் ஷாட் எடுப்பது போல ஒரே கீ அழுத்தத்தில் இதனை மேற்கொள்ள முடிகிறது.

விண்டோஸ் 7, கம்ப்யூட்டரை புரஜக்டர் ஒன்றுடன் இணைத்து இயக்குவதை எளிதாக்குகிறது. விண்டோஸ் + ப்பி கீகளை அழுத்தினால், காட்சி கம்ப்யூட்டருக்கும் புரஜக்ஷன் ஸ்கிரீனுக்குமாக மாறுகிறது.

இதில் இணைத்துத் தரப்படும் கால்குலேட்டரில் புதிய பல வசதிகள் தரப்பட்டுள்ளன. சயின்டிபிக் புரோகிராமர், புள்ளியியல் செயல்பாடுகள், யூனிட் மாற்றுதல் (கி.மீ –மைல், லிட்டர்–காலன், செல்சியல் – பாரன்ஹீட் ) போன்றவை தரப்பட்டுள்ளன.

இதில் தரப்பட்டுள்ள எக்ஸ்பி மோட் மிக மிகப் பயனுள்ளதாக இருப்பதாகப் பல வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எக்ஸ்பியில் மட்டும் இயங்கும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை எளிதில் இதன் மூலம் இயக்க முடிகிறது.

விண்டோஸ் 7 விஸ்டா போலவே பல வழிகளில் இருந்தாலும் மேலே தரப்பட்டுள்ள பல புதிய வசதிகள், கூடுதல் பாதுகாப்பு, நிலையாக இயங்கும் தன்மை ஆகியவற்றிற்காக நிச்சயம் இதற்கு நம் கம்ப்யூட்டரை மேம்படுத்திக் கொள்ளலாம். விண்டோஸ் 7 தரும் சில புதிய டூல்களை இங்கு காணலாம்.

ப்ராப்ளம் ஸ்டெப்ஸ் ரெகார்டர் (Problem Steps Recorder (PSR): விண்டோஸ் 7 சிஸ்டத் தினைக் காப்பாற்றும் ஒரு வசதி. உங்கள் கம்ப்யூட்டர் ஏதேனும் ஒரு பிரச்னையால் பாதிக்கப் படுவதாகத் தெரிந்தால், அந்த பிரச்னை உருவாகும் விதத்தினை இந்த வசதி பதிவு செய்திடும். இதன் மூலம் அந்த பதிவினை, பிரச்னையைத் தீர்க்கக் கூடிய நபருக்கு அனுப்பி, வழிமுறைகளைக் கேட்கலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது


Problem Steps Recorder (PSR) என்பதனைத் திறந்து "Record" என்ற பட்டனை அழுத்த வேண்டியதுதான். இதனை அழுத்தியபின் ஒவ்வொரு மவுஸ் கிளிக் செய்திடும்போதும் ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்படும். இவற்றுடன் நம்முடைய குறிப்புகளையும் இணைக்கலாம். இந்த ஸ்கிரீன் ஷாட்கள் அனைத்தும் அடங்கிய எச்.டி.எம்.எல். பைல் ஒன்று உருவாக்கப்படும்.

து ஸிப் செய்யப்பட்டு டெஸ்க்டாப்பில் வைக்கப்படும். பின் அது தானாக பிரச்னையின் அடிப்படையில் வல்லுநர் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த PSR பைலை psr.exe என்று டாஸ் கமாண்ட் புள்ளியில் கொடுத்தும் இயக்கலாம்.


கிரெடென்ஷியல் மேனேஜர்:
இது விண்டோஸ் 7 இயக்கத்தில் தரப்பட்டுள்ள ஒரு புதிய வசதி. விஸ்டாவில் யூசர் அக்கவுண்ட்டில் தரப்பட்ட பாஸ்வேர்ட் மேனேஜர் போன்ற வசதியை விரிவாகத் தருகிறது. இந்த டூல் மூலம் நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் நுழைந்தாலும் அந்த செயல்பாட்டிற்கான கிரெடென்ஷியல் உருவாக்கப்பட்டு ஒரு போல்டரில் தக்கவைக்கப்படுகிறது.

இதே போல இமெயில் அக்கவுண்ட் மற்றும் வெப் அக்கவுண்ட் ஆகியவற்றிற்கும் உருவாக்கலாம். இவற்றை ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் பதிந்து வைத்துக் கொண்டால், சிஸ்டம் கிராஷ் ஏற்படுகையில் இவற்றை மீண்டும் புதுப்பித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்
 
நன்றி; டெய்லி வேர்ல்ட்today-worldnews.update.blogspot

No comments: