யு திஷ்டிறரை ஏன் பலருக்கும் பிடிப்பதில்லை
எப்போதுமே நல்லவர்களாக இருப்பது கூட மற்றவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். மகாபாரதத்திலேயே பார்க்கலாம். துரியன் மிகக்கொடியவன். யுதிஷ்டிரன் நல்லவன், தர்மவான். ஆனாலும் பலருக்கு துரியனைத்தான் பிடிக்கும். மனிதர்களின் இயல்பான பலவீனங்கள் அவன் குணத்தில் உண்டு. ஆகவே அவனுள் தங்களைக் காண்பார்கள். ஆனால் யுதிஷ்டிரனை போல இருப்பது மிகக் கடினம். ஆகவே அவ்வாறு இருப்பவர்கள் மீது டீஃபால்டாக ஒரு பொறாமை கலந்த எரிச்சல் ஏற்படுகிறது. எப்படா அவன் சருக்குவான், கைகொட்டி சிரிக்கலாம் என எல்லோரும் காத்திருக்கின்றனர்.
யுதிஷ்டிரனின் உதாரணத்தையே இங்கு பார்ப்போம்.
மஹாபாரத யுத்தத்தின் பதினைந்தாம் நாள்.
முதல் தடவையாக இரவிலும் யுத்தம் தொடர்ந்தது. கிருஷ்ணரின் திட்டப்படி பீமசேனனின் மகன் கௌரவ சேனையைப் படாதபாடுபடுத்தியதால், கர்ணனின் பொறுமையை சோதித்து அருச்சுனனைக் கொல்ல அவன் வைத்திருந்த சக்தி ஆயுதத்தை அவன் மேல் பிரயோகிக்க வேண்டியிருந்தது. குரு துரோணாச்சாரியார் தன்னை மறந்து யுத்தம் செய்கிறார். அவர் பிரும்மாஸ்திரத்தை எடுத்துவிட யோசித்து கொண்டிருக்கிறார்.
இப்போது பார்த்தசாரதியின் அடுத்தத் திட்டம். பீமன் காதோடு ஒரு விஷயம் சொல்ல அவன் விரைந்து சென்று, கௌரவர் சேனையில் இருந்த அஸ்வத்தாமன் என்னும் யானையைக் கொன்று விட்டு பிறகு வெற்றி கோஷத்துடன் துரோணர் இருக்கும் இடத்துக்கு வந்து அவர் காது கேட்க "கொன்றேன் அசுவத்தாமனை" என கொக்கரிக்கின்றான். அஸ்வத்தாமா துரோணரின் ஒரே மகனின் பெயரும் கூட. அவனும் சிறந்த போர்வீரன். இருப்பினும் சொன்னது பீமன் ஆயிற்றே, அவன் பலமும் உலகம் அறிந்ததே என துரோணர் மனம் மயங்குகிறார். அவருக்கு இச்செய்தியை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்.
பொய்யே பேசாத யுதிஷ்டிரனைப் பார்த்து கேட்கிறார் அவர், "எனது மகன் அஸ்வத்தாமா மாண்டானா, கூறு யுதிஷ்டிரா" என்று. யுதிஷ்டிரனோ இறுதலைக் கொள்ளி எறும்பாகிறான். திணறிக் கொண்டே "கூறுகிறான் "அஸ்வத்தாமா ஹதஹ,...குஞ்சரஹ" (இறந்தது அஸ்வத்தாமன் ... என்னும் யானை). இறந்தது அஸ்வத்தாமன் என்பதை உரக்கக் கூறிவிட்டு, தயங்கியவாறு இரண்டாவது பாகத்தைக் கூறும்போது பார்த்தசாரதி தனது பாஞ்சஜன்ய சங்கை எடுத்து ஊத, துரோணருக்கு 'என்னும் ஒரு யானை' என்பதே காதில் விழவில்லை. அவர் உடனே யுத்தத்தை நிறுத்தி தரையில் அமர்ந்து தியானத்தைத் துவங்குகிறார். அப்போது புயல்போல கிளம்பிய த்ருபத ராஜாவின் மகனும், துரோணரைக் கொல்லவே பிறவி எடுத்த திருஷ்டத்யும்னன் தன் கத்தியை எடுத்து ஆச்சாரியரின் தலையைச் சீவி அவரைக் கொல்கிறான். ஆனால் இது இப்பதிவின் முக்கிய விஷயம் அல்ல.
இப்போதுதான் இப்பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். யுதிஷ்டிரனின் வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வந்த வினாடியிலேயே அவன் தேர்ச் சக்கரங்கள் பூமியைத் தொட்டனவாம். அதுவரை அவை தரையிலிருந்து நான்கு அங்குலம் உயரத்திலேயே இருந்தனவாம். அவனும் பொய் சொன்ன பிறகு பொய்மை நிறைந்த பூமியின் பகுதியாக அவனும் ஆகிவிட்டான் என வியாசர் அழகாகக் கூறுகிறார்.
அது மட்டுமா, பிற்காலத்தில் சொர்க்கம் செல்ல நேர்ந்த போது ஒரு முகூர்த்த காலம் நரகத்துக்கும் போய் விட்டு வருகிறான். இவ்வளவு பொய் புனைசுருட்டு எல்லாம் செய்து பாரத யுத்தத்துக்கே காரணமாக இருந்த துரியனுக்கு கூட அவ்வளவு வசை சேரவில்லை. ஆனால் யுதிஷ்டிரன் பெற்ற கெட்ட பெயர் மிகப்பெரியது. இதற்கு முக்கியக் காரணமே அவன் பொய் சொல்ல மாட்டான் என்ற மக்களது அசைக்கமுடியாத நம்பிக்கை அசைந்ததே ஆகும்.
அதே போல எப்போதும் தியாகம் செய்து வருபவர்களும் ரொம்பவுமே போர். உதாரணத்துக்கு குடும்பத்துக்கு மூத்த மகன் தன் தம்பி தங்கைகளுக்காக தியாகம் செய்து எல்லோரையும் முன்னேற்றி தான் மட்டும் சந்தியில் நிற்பது பல தமிழ், இந்தி ஆகிய மொழிப்படங்களில் காட்டப்பட்டுள்ளன. படிக்காதவன், ஆறிலிருந்து இருபது வரை, குலவிளக்கு ஆகிய பல படங்கள் வந்து பார்வையாளர்களின் கண்களை குளமாக்கிச் சென்றுள்ளன.
Search my older Blog
Tuesday, November 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment