உங்களுக்குப் பிடித்தமான கடவுள் யார்? (தயவுசெய்து எம்மதமும் சம்மதம் என்று சொல்லி விடாதீர்கள்...)
அவர் ராஜா வீட்டுப் பிள்ளை யானாலும் ரொம்பவே சிம்பிள் சாமி! தம்பியோட இரண்டாவது கல்யாணத்துக்குக் கூட ஹெல்ப் செய்வார்; ஆனால் தான் மட்டும் வம்புத் தும்புல மாட்டிக்காத பெரியண்ணா! `என்னடா... நம்ப குடும்பத்துல இருக்கிறவங்க மாதிரி நாம இல்லையே... வேற ஜாடையா இருக் கோமே'ங்கிற காம்ப்ளெக்ஸ் எல்லாம் இல்லாத தங்கமனசுக்காரன்.
முட்டுச்சந்து, அரச மரத்தடி எதுன் னாலும் `ஆஹா'ன்னு இருந்துக்கும் தீராத விளையாட்டுப் பிள்ளை. சாணி, மஞ்சள், களிமண்ணுன்னு எதுல பிடிச்சு வெச்சாலும் பரமதிருப்தி ஆயிடும் ஜென்டில்மேன்.
அருகம்புல்லைப் பறிச்சுப் போட்டால் கூட குஷியாகி விடும் முதல்வன். ஔவைப்பாட்டிக்கு தோஸ்த்தாகி விட்ட அழகிய தமிழ் மகன். என் இதயக்கனியான அந்த உலக நாயகன் யார்னு தெரிஞ்சுத
ஆதவன் எப்படி?
பத்து வயசு சூர்யா டெக்னிக் கொஞ்சம் புதுசு தான்!
எப்போதும் சந்தோஷமாக இருக்க நினைக்கிறேன். அதற்கு என்ன?
நம்ப எல்லைக்கு உட்படாத வற்றைப் பற்றிக் கவலைப் படாமல் இருப்பதுதான்... எனக்குத் தெரிந்த ஒரே வழி!
மொய் - அன்பளிப்பு விஷயத்தில் ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவம் ஏதும் உண்டா?
எங்க அக்கா திருமணத்தில் அன்பளிப்பாக ஒரு டஜன் மில்க் குக்கர்கள், ஒரு டஜன் நைட் லாம்ப்புகள், ஒரு டஜன் வால் கிளாக்குகள், வந்த கடுப்பில்... என் கல்யாண அழைப்பிதழில், "ப்ளீஸ் அவாய்ட் மில்க் குக்கர்ஸ்... நைட் லாம்ப்ஸ் அண்ட் வால் கிளாக்ஸ்' என்று போட்டு விட்டோம். வந்து குவிந்தன. ஒரு டஜன் கேஸட் ஸ்டாண்டுகள், ஒரு டஜன் ஜூஸ் செட்ட.
படித்ததில் ரசித்தது?
முயற்சியுள்ளவன், கதவுகளில் கைப்பிடிகளையும், சாவிகளையும் காண்கின்றான்.
சோம்பேறி யின் கண்களுக்கோ தாழ்ப்பாள்களும், பூட்டுகளுமே தென்படுகின்றன.
.
மரணம் பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்குப் பயமாக இருக்கிறது. உங்களுக்கு?
"நீ பூமியில் பிறக்கும்முன்பே, உனக்காக உன் தாயின் மார்பிலே பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன்.
நீ இறந்த பின்னும் உனக்காக இன் னொரு உலகையே படைத்து வைத்திருக்கக் கூடும். அதனால் இறை நம் பிக்கையுடன் இரு!" இது ! தாகூரிடம் இரவல் வாங்கியது. தைரி யமா இருங்
திருமணப் பத்திரிகை களில் கடைசியில், `தங்கள் வரவை எதிர்நோக்கும்' என்ற இடத்தில் `சுற்றமும் நட்பும்' என்று போடாமல் `வளவள' என்று ஒரு முழு நீளப் பட்டியல் போடுகிறார்களே, தேவையா?
அது வளவள லிஸ்ட் இல்லை! ரிமைன்டர் நோட்டிஸ்! கீழ்க்கண்ட நபர் களுக்கு, நாங்கள் நிறைய மொய் எழுதி அழுதிருக்கோம். அவர்களும் அதே போல ஞாபகமாய் மொய் எழுதி கடனைத் தீர்க்க வேண்டியது... என்றெல்லாம் எழுதினால் நல்லாவா இருக்கும்?
.
சமீபத்தில் பார்த்து ரசித்த டீ.வி. நிகழ்ச்சி என்ன?
`அதிர்ந்த' என்று கேளுங்களேன்.. ஸ்டார் டீ.வி.யில் ஒளிபரப்பாகும் `சச் கா ஸாம்னா' நிகழ்ச்சி. (உண்மைக்கு அருகில்!) இதில் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய வாழ்க்கையைப் பற்றிய ஏடா கூடமான கேள்விகளுக்கு, குடும்பத்தினர் முன்பாக அமர்ந்து பதிலளிக்கின்றனர். உதாரணம்:
* உங்க மனைவிக்கு நீங்க துரோகம் செய்ததுண்டா?
* உங்கள் உறவினர் வீட்டில் திருடியதுண்டா?
லை-டிடெக்டர் உதவியுடன் பதில்கள் ஆராயப்படுகின்றன. இதில் பல குடும்பப்(!) பெண்கள் கலந்து கொண்டு கூசாமல் உண்மையை விளம்பி, பல லட்சப் பரிசுடன் நடை பயில, அவரது கணவர்கள் சிவந்த முகத்துடன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியேறுவதைப் பார்க்க பரிதாபமாக இருந்த.
வாழ்க்கையை ஒரு விபத்தாகவும் பார்க்கலாம். ஓர் அதிசயமாகவும் ரசிக்கலாம். நீங்க எப்படிப் பார்க்கறீங்க?
அனுபவமாக!
`சோ' என்று கொட்டும் மழைக்குச் சூடான பகோடா, சூடான பஜ்ஜி... உங்கள் சாய்ஸ் எது?
மழைதான் என்னோட முதல் சாய்ஸ்! ஆனால் நீங்க... பகோடாவா, பஜ்ஜியா என்று கேட்பதால்... வெயிட்... கொஞ்சம் யோசிக் கிறேன். ஆ... பதில் கிடைத்து விட்டது. பொதுவாக, ரொம்பவே வெளிப்படை யானதை விட, சின்ன சஸ்பென்ஸ் மறைந் திருக்கும் விஷயங்களே நம்மைக் கவர்கின் றன என்பதால்...
இலேசாக சோம்பும், பூண்டும் கலந்து அரைத்து விட்ட, `புஸ்' என்று உப்பிய... உள்ளே இருப்பது சுருள் சுருள் வெங்காயமா, வட்ட வட்ட உருளைக் கிழங்கா என்ற மர்மம் பொதிந்த...
பஜ்ஜிக்கே என் வோட்டு
!courtesy: mangayar malar, dated november09
Search my older Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment