அரை கோடி ரூபாயில் ஒரு சலவை நிலையம்
                         
                                                      
                         Last Updated :                          
                          
                          
அரை கோடி ரூபாயில் முற்றிலும் நவீனமான - பிரம்மாண்டமான ஒரு சலவை நிலையம்; அதுவும் ஒரு பெண் நிர்வகிக்கிறார். இந்த சேதி உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.  ஆனால்,  திருச்சி "ராம்சன் வெட் அண்டு டிரை கிளீனர்ஸ்' முன் கதை கேள்விபட்டவர்களுக்கு எதுவுமே ஆச்சர்யம் கிடையாது.பொறியியல் பட்டதாரியான டி.ஆர். நடராஜன் வெற்றிகரமான ஒரு பொறியியல் நிறுவனத்தின் அதிபரும்கூட. ஆனால், அவருடைய பிரியமான மனைவி ஜெயந்தி, ""நானும் ஏதாவது செய்ய வேண்டும்'' என்று கேட்டபோது அவர் தேர்ந்தெடுத்ததோ தனக்கு ஒருபோதும் சம்பந்தமில்லாத சலவைத் தொழில். கணவரின் தேர்வை ஜெயந்தி ஒரு சவாலாக ஏற்றார். தமிழகத்தின் முன்னோடி சலவை நிலையம் உருவான கதை இதுதான்.எப்படி வந்தது இந்த யோசனை?ஜெயந்தி கூறுகிறார்: ""என் கணவர் எதையுமே வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர். ஆகையால், முற்றிலும் பிரத்யேகமான ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று யோசித்தோம். நகர்மயமாதலில் சலவைப் பணி என்பது எதிர்காலத்தில் ஒரு பெரிய சவாலாக மாறும் என்பதை உணர்ந்தோம். தரமான, நவீன சலவை நிலையங்கள் இல்லை என்பதையும் உணர்ந்தோம். துணிச்சலாக தொழிலில் இறங்கினோம். ஒரு நாளில் 1,500 துணிகள் வரை இதில் துவைக்க முடியும். திருச்சி சுற்றுவட்டார மருத்துவமனைகள், ஹோட்டல்களின் துணிகள் இங்கே அனுப்பி வைக்கப்படுகின்றன. தனி யார்கள் ஒரு பேண்ட், சர்ட் எடுத்து வந்தாலும் துவைத்துத் தருகிறோம், ஒரு மணி நேரத்துக்குள்! இப்போது திருச்சியிலேயே எங்களுக்கு இரண்டு கிளைகள் இருக்கின்றன. மேலும் இரு கிளைகளைத் தொடங்கப்போகிறோம்.''ஜெயந்தியின் முகத்தில் சலவை செய்த சிரிப்பு!
 நன்றி; தினமணிகஜா  யிறு கொநடா ட்டம் 9november09  
 
No comments:
Post a Comment