-
ஆண்டவனின் படைப்பில் தான் எவ்வளவு சிறப்பு! ஆச்சரியமானது மட்டுமல்ல - விந்தையோடு வேடிக்கையானதும் என்பது உண்மை. ஒவ்வொன்றும் வேறுவிதமான, தனக்காகவே கொண்ட பழக்கங்கள் என்பதுவும் மறக்க முடியாத விஷயம்.
சில விலங்குகள் நான்கு கால்கள்; சில கூடுகட்டிப் பறவைகளாகப் பறக்கின்றன. இருந்தாலும் எல்லா விலங்களுகளுக்கும், பறவைகளுக்கும் வால் என்பது முக்கியமான அம்சம். வால் இல்லாத விலங்கினங்கள் இருக்கவே முடியாது.
மனிதப் பிறவியான நமக்கு நம்முடைய உடலில் பின்பக்கம் இருப்பதற்கு அருகே தொட்டுப் பார்த்தால்... அந்த எலும்புக்கூடு நடுவே சிறிதாவது எலும்பு எலுமிச்சம் பழம் அல்லது நெல்லிக்காய் அளவு தனியாக இருப்பதை நாம் உணரலாம். ஆனால் விலங்கினங்களுக்கு இந்தக் குறிப்பிட்ட எலும்பு மட்டும் எலும்புக்கூட்டோடு நிற்காமல் சற்று நீடித்து உடலைவிட நீளமாக அமைந்துள்ளதால்தான் இதை வால் என்று கூறுகிறோம். ஆனால் மனிதனுக்கு வால் தேவையில்லை என்று கருதியோ �ண்டவன் அந்த வால் பகுதியை விலங்கிற்குக் கொடுத்துப் படைப்பதால் மட்டும் சிருஷ்டி கர்த்தா என்ற அளவில் சந்தோஷமடைந்து இருக்கக்கூடும்.
ஆனால் ஒவ்வொரு உயிரினங்களுக்கம் வாலின் அமைப்பு வேறுவேறாக வித்தியாசம் இருக்கிறது.ஒரே அளவில் இருப்பதில்லை. உபயோகத்தில்கூட மிகவும் பெரிய அளவில் வேறுபாடு வித்தியாசம் உள்ளது.
உதாரணமாக குரங்கு ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரதிதற்கு தாவ வாலைத்தான் உபயோகப்படுத்துகிறது. பூனை மற்றும் நாய் இனங்கள் தங்கள் கோபத்தைக் காட்டத்தான் தேவைக்குள்ளாகிறது. குறிப்பாக பூனைக்குக் கோபம் வந்தால் தனது வாலை செங்குத்தாக குச்சி அல்லது கம்புபோல் நிற்காமல் அவேசமாக வைத்துக் கொள்கிறது.
நாய் என்றால் வாலாட்டும் என்பது சின்னக் குழந்தைக்குக்கூட தெரிந்த விஷயம். ஆனால் அதே நாய் தனது வாலைத் தனது இரண்டு காலிற்கும் நடுவே சுருட்டி வைத்துக் கொண்டால் தனது வருத்தத்தையோ பயத்தையோ தெரிவிக்கிறது.
ரோட்டில் போய்க் கொண்டு இருக்கும்போது மிகவும் சிறிய பிஸ்கட் துண்டை எந்த நாய்க்கு நாம் போட்டாலும் அதே நாய் அடுத்த தடவை நம்மைப் பார்த்தால் விசுவாசத்தோடு நன்றி உணர்ச்சியோடு நம் பின்னாலேயே வால் சுருட்டியும் ஆட்டியும் வேகமாக அசைந்து வருவது தெரிந்த விஷயம். ஆனால் குரங்கு அதிரை, பசு, எருமை போன்றவை தனது வாலை ஈ அல்லது வேறு ஜந்துக்கள் அண்டக்கூடாது என்று வாலாட்டிக் கொண்டு இருக்கும்.
அணில்கூட தனது நான்கு கால்களுக்குக் கீழே குறிப்பாகக் கொண்டு தனது வாலை அப்படியே ஊர்வலம் போகும் சுவாமி விக்கிரகத்திற்குக் குடைபிடிப்பது போலப் பயன்படுத்துவது பார்க்க நம் கண்களுக்கு அரியக்காட்சி!
இதை எல்லாம் விட வேடிக்கை என்னவென்றால் வேறு சில விலங்குகள் தனது வாலைத் தனது எதிரியைத் தாக்கவும், தன்னைக் காத்துக் கொள்ளத் தற்காப்புக்காக உபயோகிப்பதுதான் வேடிக்கை.
கடலளவில் உள்ள விலங்கினங்கள் குளிர்காலத்தில் அந்த வால்களை மாத்திரம் அரவே மடக்கிக்கொண்டு உஷ்ணத்தைத் தானே உண்டாக்கி கொள்வதால் குளிர் அதற்குப் பயம் இல்லை. அதன் வால் அதற்குப் போர்வை.
மயில்கள் தனது தோகையை விரித்து வாலோடு நடனமாடினால் வம்சவிருத்திக்குத் தான் தயார் என்று சைகை.
கடலில் உள்ள விதவிதமான மீன்களுக்கு அந்த வால்தான் துடுப்பு. எந்தத் திசை போக வேண்டும் என்றாலும் அந்தத் திசைநோக்கி வாலைத் திருப்பினால் மோட்டார் வண்டியின் வீல் போல் பயன்படும்.
வேறு வகை விலங்கினங்கள் தனது வாலை மூடிக் கொள்வது பாதுகாப்பு, எதிர்பாராத விரோதிகளின் மோதலை தவிர்க்க. ஆனால் பல்லி, ஓணான் முதலியவைகள் தனது வாலை இழக்க நேர்ந்தால் துடிதுடித்து மரணடைவது நமக்குத் தெரிந்த விஷயம்.
ஆனாலும் யானைக்கு மட்டும் தனது வாலையையும் தும்பிக்கையையும் தூங்கும்போது மட்டும் உபயோகிப்பதில்லை. இருந்தபோதிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள சார்க் என்ற ராட்சத மீன்கள் பலமானவை. அந்த மீன்களின் வால்மட்டும் யார்மீதாவது தாக்கப்பட்டால் மரணம் நிச்சயம்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள் ளமுதல் மன்னன் மிஸ்டர். இன்வின் எவ்வளவோ முதலைகளைப் பிடித்து அடக்கிப் பிரபலமடைந்தாலும் இந்த சார்ப் மீன்வால் திடீர் தாக்குதலால் அகால மரணமடைந்தது தெரிந்த விஷயம். அதனால்தான் பெரியவர்கள் நம்மை "வாலை சுருட்டிக் கொண்டு போ'' என்று சொல்கிறார்கள் போலும்.
வால்தனம்
* பெங்குவின் பறவை தன் வால்பகுதியையே சுக்கானைப் போல் பயன்படுத்துகிறது.
* தேவதை மீன்கள் தனது வாலையே தூண்டிலாகப் பயன்படுத்தி, சிறுமீன்களைப் பிடித்து உண்ணும்.
* பாலைவனத்தில் வாழும் ஜீலா என்ற விஷத்தன்மை வாய்ந்த பல்லி தன் தடித்த வால்பகுதியில் உணவைச் சேமித்து வைக்கிறது.
* ஆர்ட்வாக் என்ற விலங்கு தன் வாலாலேயே மனிதனை அடித்து வீழ்த்திவிடும்.
* நாய், பூனை போன்றவை தம் வால்கள் மூலமே பேசிக் கொள்ளுமாம்.
* வெள்ளை வால்மீன் தன் வாலைக் கொடிபோல் உயர்த்தி ஆபத்தை அறிவிக்குமாம்.
* மீனின் வாலுக்குச் சுவையான உணரும் தன்மையுண்டு.
* ஓணான் வால் அதன் உடலைவிட இரண்டரை மடங்கு அதிக நீளமாக இருக்கும்.
* முள்வால் ஓணாவின் வாலில் வளையம் வளையயமாக முள்செதில்கள் அமைந்திருக்கும்.
* பல்லி எதிரிகளிடமிருந்து தப்பிக்கத் தனது வாலைக் கழற்றி விட்டு விட்டுத் தப்பியேயிவிடும்.
* முதலையின் வால் தட்டையாகத் துடுப்பு போல் அமைந்திருப்பதால் நீரில் வேகமாக நீந்திச் செல்ல முடிகிறது.
* கிலுகிலுப்பை பாம்பு தன் வாலை ஆட்டி கலகலவென்று ஒலி எழுப்பும்.
No comments:
Post a Comment