ஆராதனைக்கு எளியன்:
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ச்ததைவ பஜாம்யஹம்:எந்த உருவத்தில் என்னை அர்ஜிக்கிரார்களோ அந்த உருவத்தில் நான் என்னை அவர்களுக்கு காட்டுகிறேன்.
ஒரு எஜமானன் தன்னிடம் வேலை செய்யும் ஆளிடம் இன்முகம் காட்டி, இனிய சொற்களைச் சொல்வதே வேலையாளுக்கு இனிமையாக இருக்கும். அதே போல் லோக எஜமானனான எம்பெருமான் நாம் விரும்பும் படி அர்ச்சையிலே நாம் விரும்பும் படி தன்னைக் காட்டிக் கொடுக்கிறானாம். எம்பெருமான் மிகப்பெரியவானாக இருந்தும் தன்னை எளியவனாகவே காட்டிக் காட்டிக்கொள்கிறான்.
ஆழ்வார் ஸ்ரீ சுக்தி:
தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர்
No comments:
Post a Comment