ஆசை:
புகை இல்லாமல் நெருப்பு இல்லாதது போல ஆசை இல்லாத சரீரம் பெற்ற ஜீவன் இல்லை. இந்த விஷய ஆசையை விலக்கினால் பகவத் ஞானம் உண்டாகும். ஆனால் கண்ணாடியில் உள்ள தூசியை தொடைத்தாலும் அது வந்து மீண்டும் படிவத்தைப் போன்று நம்மை ஆசை மீண்டும் மூடிக்கொள்கிறது. இந்த விஷய ஆசை இல்லாமல் வாழ்வது எப்படி என்று யோசித்த அர்ஜுனனுக்கு கண்ணன் அருளிய பதில் இதோ: –ஹே அர்ஜுனா – தாயின் கர்பத்தில் இருக்கும் சிசுவை உத்பலம் என்ற மெல்லிய தோல் மூடியிருக்கும். அந்த குழந்தை எவ்வளவு முயன்றாலும் அதால் வெளியே வரமுடியாது, நான் இச்சித்த போதே அந்த சிசுவால் அந்தக் கற்பச் சிறையில் இருந்து அக்குழந்தை வெளியே வரமுடியும். அதுபோல ஆசையான திரையை என்னாலே தான் போக்க முடியுமே ஒழிய, உன்னாலே போக்கிக்கொள்ளமுடியாது என்பது சத்யவாக்யனான கண்ணனின் திருவாக்கு.
அதற்கு நாம் செய்ய வேண்டியது பகவானின் சுத்தசத்வமயமான திருமேனியை தியானிப்பதே ஆகும்.
No comments:
Post a Comment